உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 16-வது நாளாக தொடர்ந்து தொடர்ந்து வருகிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் பீரங்கி, ஏவுகணை ஆகிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் ரஷ்யாவிற்கு, உக்ரைன் படையினரும் ஈடுகொடுத்து வருகின்றனர். இப்போரில் இருநாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரையிலும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தாக்குதல் தொடங்கிய நாள் முதல் இப்போது வரையிலும் 2800க்கும் அதிகமான உக்ரைனின் ராணுவம் தளவாடங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகமானது தெரிவித்துள்ளது. அதேபோன்று ரஷ்யாவும் பெரும்பாலான ராணுவம் தளவாடங்களை இழந்துள்ளது. இதற்கிடையில் சுமார் 12 ஆயிரம் ரஷ்ய ராணுவவீரர்கள் போரில் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.