பஞ்சாயத்து தலைவரின் மகனை கொன்ற வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் சீயோன் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் அய்யக்கோடு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளான் இந்நிலையில் கடந்த 4-ஆம் வீட்டை விட்டு வெளியே சென்ற லிபின் ராஜா வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து லிபின் ராஜாவின் தந்தை நேசமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் லிபின் ராஜா கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து லிவின் ராஜாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் லிவின் ராஜாவை கொன்ற வழக்கில் 2 பேர் நாகர்கோவில் ஜூடிசியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த எபின் மற்றும் ஸ்டீபன்ராஜ் என்பது தெரியவந்தது. இவர்கள் முன்விரோதம் காரணமாக லிபின் ராஜாவை அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு மோட்டார் சைக்கிளில் லிபின் ராஜாவின் உடலை ஏற்றி சென்று பழவூரில் புதைத்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பேருந்தில் பல ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். ஆனால் எப்படியும் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இவர்கள் நீதிமன்றத்தில் வந்து சரணடைந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.