பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் உண்டியலில் 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த கோவிலில் 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 7 குடங்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உண்டியல் எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உண்டியல் பணத்தை எண்ணினர். இதில் மொத்தம் 18 லட்சத்து 49 ஆயிரத்து 903 ரூபாய் பணம் இருந்துள்ளது. மேலும் 22.400 தங்கம், 72.800 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் இருந்தது.