Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுத்த மர்மநபர்கள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு குத்துவிளக்கு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் ஆதங்கோடு கருவத்தலை பகுதியில் நாகலக்ஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் வழக்கம் போல் பூசாரி பூஜையை முடித்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கோவிலின் முன்பு இருந்த 2 பீடங்கள் உடைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளார் அப்போது அம்மன் சிலைக்கு அருகில் இருந்த 3 குத்துவிளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |