தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதை சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ,ஆசிரியர்களுக்கு, தொழில் துறையினருக்கு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. கல்வித் துறையின் மானிய கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அடிப்படை ஊதியத்தில் கணினி அறிவியல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என கணினி ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகள் இன்றைய கணினி உலகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வேலை வாய்ப்பில் பின் தங்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது கணினி அறிவியல் பாட திட்டத்தை அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் வந்த அதிமுக ஆட்சி கணினி அறிவியல் பாடத் திட்டத்தை முடக்கி விட்டனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய கணினி கல்வி கிடைக்காமல் பள்ளி மாணவர்கள் படிப்பை முடித்து வருகின்றனர். மேலும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற கோரி மத்திய மாநில அரசுகளிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் எங்கள் கோரிக்கை தொடர்ந்து புறக்கபட்டு வருகிறது. திமுக ஆட்சி 2020ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் கூட கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு நிலைகளில் பலமுறை மனு அளிக்கப்பட்டு 1100 தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கைகளை கூறி வந்தோம் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. முதன்மைக் கல்வி அலுவலர்களும் இது மாநில அரசின் கொள்கை முடிவு என்று ஒன்றை வரியில் ஒற்றை வரியில் பதில் அளித்து வருகின்றன.
அடிப்படை புரிதல் இல்லாமல் முதல்வர் தனிப் பிரிவில் இருந்து இதுபோன்ற அதிகாரிகள் பணியாற்றுவது எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்கு தீர்வை அளிக்காது பள்ளி கல்வி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த பிரச்சினையில் அமைதி காப்பது அரசின் கொள்கை முடிவு என்ன தான் என கேள்வி கேட்க தோன்றுகிறது. முதல்வர் முக ஸ்டாலின் மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு தொடக்கக்கல்வி கணினி கல்வி அறிமுகம் செய்ய வேண்டும். இது சார்ந்து இருக்கும் கணினி பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பாக வெளியிட்டு அதனை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.