Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக உணவு வழங்கவில்லை ?…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

 அழகப்பா பல்கலைக்கழக  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான  மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இங்கு அமைந்துள்ள விடுதியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில்  விடுதியில் தரம் குறைந்த உணவுகள்  அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கூறியுள்ளனர் .

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று கல்லூரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |