Categories
மாநில செய்திகள்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்கள் கவனத்திற்கு…. மார்ச் 15-க்குள் ஆவணங்களை பதிவேற்ற உத்தரவு…!!!!!

தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணி இடத்தில் 1060 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை பதினைந்து படங்களுக்கு ஐந்து நாட்கள் காலை மாலை நேரங்களில் பத்து பிரிவுகளாக தேர்வு கணினி மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு மற்றும் இறுதி விடை குறிப்புகள் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையான கூடுதல் ஆவணங்களை மார்ச் 18-ம் தேதிக்குள் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |