கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவிர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள மந்த நிலை மாறும். சேமிப்பு பணம் செலவாகும். நித்திரை கொஞ்சம் தாமதப்பட்டு தான் இன்று வந்து சேரும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு நித்திரைக்கு செல்வது ரொம்ப சிறப்பு. இன்று குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும் கணவன் மனைவிக்கு இடையே திருப்தியான உறவு நிலை காணப்படும்.
பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். தைரியம் கூடும். எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மையே ஏற்படும். சகோதரர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். காரியம் வெற்றி இருக்கும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.
அது மட்டுமில்லாமல் கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும் கடன்கள் மட்டும் நீங்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீலம்