Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யாவில் ஏற்றுமதி நிறுத்தம்…. பிளேஸ்டேஷன் நிறுவனம் அறிவிப்பு…!!!

உக்ரைனில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளேஸ்டேஷன் மற்றும் நிண்டெண்டோ ஆகிய ஜப்பான் நிறுவனங்கள் ரஷ்யாவில் ஏற்றுமதி செய்வதை நிறுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது .

ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனினும், ரஷ்யா பின்வாங்காமல், தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான் நாட்டின் பிளேஸ்டேஷன் மற்றும் நிண்டெண்டோ  நிறுவனங்களும் தங்கள் பொருட்களை ரஷ்ய நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

 

Categories

Tech |