சி.ஐ.டி.யு. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு சுழற்சிமுறையில் பணிகள் வழங்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிடமாறுதல் ஆணைகளை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சிவபாலன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் வைத்தியநாதன், முறைசாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சந்திரன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.