Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெங்காயம் மொத்தமாக அனுப்புகிறோம்…. “2 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி”…. விசாரணையில் போலீசார்….!!

வியாபாரியிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் ரமேஷ் மோக்ரா  என்பவர் வசித்து வருகிறார். இவர் வெங்காயம், பூண்டு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரமேஷ் மோக்கராவுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்  தன்னுடைய பெயர் வாசன் என்று கூறியுள்ளார். இந்த நபர் ரமேஷ் மோக்ராவிடம் தான் வெங்காய மொத்த விற்பனை செய்வதாகவும், உங்களுக்கு தேவைப்பட்டால் அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய ரமேஷ் மோக்ரா முன்பணமாக ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகு அந்த நபரிடம் எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. இதுகுறித்து ரமேஷ் மோக்ரா விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |