மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பெருந்திட்ட வளாகத்தின் எதிரே பழங்குடி இருளர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இவர்கள் இருளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை றது செய்ய வேண்டும் என கூறினர். இதனையடுத்து இருளர் மக்கள் மீது கொள்ளை வழக்குகள் சுமத்தும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மேலும் கைவினை முன்னேற்ற கழக தலைவர் பாலு, திட்ட இயக்குனர் ரபேல்ராஜ், கல்வி ஆலோசகர் வக்கீல் லூசினா, ம.தி.மு.க மாநில தீர்மான குழு உறுப்பினர் நரசிம்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, ஒருங்கிணைப்பாளர் பிரபால்மணி, தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.