Categories
மாநில செய்திகள்

“சூப்பரோ சூப்பர்”…. ரூ.1 லட்சம் பரிசுடன் விருது…. மார்ச் 15 கடைசி நாள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த அவர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பலவற்றுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்து வருகிறது. அதற்கான விண்ணப்பப் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை மற்றும் அம்பத்தூர் என்ற முகவரிக்குச் சென்று தகவல்களை அறிந்துகொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 15ஆம் தேதி கடைசி நாள் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |