Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது” மாணவர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 1000-கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சத்தியமங்கலம், பாலிகாணப்பள்ளி, ஓட்டப்பள்ளி, தும்மணப்பள்ளி, முகலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு காவல்துறையினர் கூடுதல் பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன்பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |