தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னை பெரம்பூர் பெரியார் நகர் மின் பராமரிப்பு பணி காரணமாக பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13 மற்றும் 15வது தெரு, சந்திரசேகரன் சாலை, சிவ இளங்கோ 70 அடி சாலை, ஜவஹர் நகர் 1, 3, 4, 5, 6வது தெரு, ஜி. கே. எம் காலனி 9, 10, 11வது தெரு கந்தசாமி சாலை ஆகிய பகுதிகளில் 12-ம் தேதி சனிக்கிழமை இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், சாத்தமங்கலம், வெற்றியூா், கள்ளுா், சேனாபதி, முடிகொண்டான், கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, திருமானூா், ஏலாக்குறிச்சி, கீழக்கொளத்தூா், கோவிலூா், சின்னப்பட்டாக்காடு, மாத்தூா், காமரசவல்லி, குருவாடி, தூத்தூா், அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, கீழராமநல்லூா், திருமழபாடி, கண்டராதித்தம், புதுக்கோட்டை, வைப்பூா், மேலராமநல்லூா், இலந்தைகூடம், வண்ணம்புத்தூா் ஆகிய பகுதிகளில் 12-ம் தேதி இன்று காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது .
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் 12-ம் தேதி இன்று நடைெபற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், ராஜகோபாலபுரம், கம்பன்நகர், பெரியார்நகர், பூங்காநகர், கூடல்நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை, சத்தியமூர்த்தி நகர், பி.யூ.சின்னப்பா நகர், அசோக்நகர், கே.எல்.கே.எஸ் நகர், திருநகர், சக்திநகர், மேட்டுப்பட்டி, திருவப்பூர், கீழ 2 வடபுறம், பெருமாள்கோவில் மார்க்கெட், மரக்கடைவீதி, காமராஜபுரம், கோஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
புதுக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 12-ம் தேதி இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 12-ம் தேதி இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், பொன்னமராவதி, வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி, பிடாரம்பட்டி, வார்ப்பட்டி, வேகுப்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, மைலாப்பூர், ஆலவயல், நகரப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 12-ம் தேதி இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி சோத்துப்பாலை, சொக்கநாதப்பட்டி, மாந்தாங்குடி, காட்டுநாவல், மங்களத்து பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, கல்லாக்கோட்டை, வேம்பன்பட்டி, சிவன்தான் பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, மெய்குடிபட்டி, ஆத்தியடிபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் 12-ம் தேதி இன்று நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி, கட்டுமாவடி, அம்பலவாநேந்தல், ஆவுடையார்கோவில், ஏம்பல், அரசர்குளம், கொடிவயல், வல்லவாரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, சூரன்விடுதி, கீழாத்தூர், பள்ளத்திவிடுதி, அரையப்பட்டி, பசுவயல், நெடுவாசல், குறுவாடி, ஆண்டவராயபுரம், எல்.என்.புரம், அனவயல், தடியமனை மற்றும் இதனை சார்ந்துள்ள பகுதிகளில் 12-ம் தேதி இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள நகர துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பெறும் வாட்டர் ஒர்க்ஸ் உயரழுத்த மின் தொடரில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 12-ம் தேதி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டூவிபுரம் 1, 2, 3, 4, 5-வது தெரு, ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், கே. வி. கே. நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.