Categories
தேசிய செய்திகள்

விதிமீறல்…. Paytm பேமெண்ட்ஸ் மீது நடவடிக்கை…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை …….!!!

இந்தியாவில் தற்போது முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான Paytm நிறுவனத்தின் துணை நிறுவனமான Paytm பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது நிர்வாகம் மற்றும் சேவையில் விதிமீறல்கள் செய்துள்ளதை ரிசர்வ் வங்கி(RBI) கண்டுபிடித்துள்ளது. இதை அடுத்து இணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் நிறுவனம், தனது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என ரிசர்வ் வங்கி திடீரென  உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் அக்ரவால்  வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,“ பேடிஎம் பேமெண்ட்ஸ்” வங்கி புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பண பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கியின் விதிகளை முறையாக கடைபிடிக்காததால் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |