Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விவசாயத்தில் நஷ்டம்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் முதியவர் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் சுப்பிரமணிக்கு விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணத்தினால் பூச்சி மருந்து குடித்துள்ளார். அதன்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுப்பிரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |