சிபிஎஸ்இ மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய அரசு பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்து அதன் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதை அடுத்து தற்போது பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி மே மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் பருவத்தேர்வுக்கான பாடவாரியான தேர்வுகள் குறித்த தேதிகள் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான www. cbse. gov. in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.