Categories
தேசிய செய்திகள்

மக்களே…! பேடிஎம் Payment-க்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!

பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட்க்கு புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக தடை விதித்துள்ளது. கண்காணிப்பு பிரச்சினைகள் காரணமாக பேடியம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் “புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய தணிக்கை நிறுவனம் ஒன்றை நியமிக்கவும்  உத்தர விடப்பட்டிருக்கிறது. வங்கி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் எனில் ஐடி தணிக்கையாளரின் அறிக்கை பார்த்த பின்னர் ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெற்று சேர்க்கவேண்டும்.

பேடியம் வங்கியில் கண்காணிப்பு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளதை  தொடர்ந்து தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் கூறியுள்ளது. பேடிஎம் பங்கு விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வரும் நிலையில் இந்த வங்கியின் விலை  பேடிஎம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. திங்களன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் பேடியம் பங்கு விலை கடுமையாக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |