சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு சிபாரிசு செய்யும் நடிகர் கார்த்தி.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இத்திரைப்படமானது பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பல பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி இத்திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “எதற்கும் துணிந்தவன் இதுபோன்ற எரியும் சிக்கலை கையாண்டதற்கும் தடைசெய்யப்பட்ட தலைப்பில் உரையாடலை தொடங்கியதற்கும் எனது பாராட்டுக்கள். குடும்பத்தினர் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..! என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் அண்ணனின் திரைப்படத்திற்கு நன்றாக விளம்பரம் செய்கிறாரே என்று விமர்சிக்கின்றனர். மேலும் இப்படம் நன்றாக இருக்கின்றது எனவும் கருத்து கூறி வருகின்றனர்.