ஓய்வுபெற்ற வீட்டு வசதி வாரிய சங்க செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேசவா நகர் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியாகாருண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மபிரபன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பி.எப். பணம் ரூ.30 லட்சம் கிடைக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனால் மனமுடைந்த மனோகரன் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகன் மனோகரனை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மனோகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்மபிரபன் வந்தவாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.