Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! எவ்வளவு பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை…. வங்கி சூப்பர் அறிவிப்பு…!!!!

டைமண்ட் நடப்பு கணக்கு இருக்கும்  பலவிதமான வசதிகளை வழங்கி SBI  வங்கியானது வெளியிட்டுள்ளது.

நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் வங்கிகளில் ஒன்று SBI வங்கி. எனவே இந்த வங்கி மக்களுக்கு பல விதமான பண பரிவர்த்தனைகளை செய்தும் மற்றும் சேமிப்பு திட்டங்களும் கொண்டு விளங்குகிறது. அதாவது பல பரிவர்த்தனை மாற்றங்களை எஸ்பிஐ வங்கியால் கொடுக்கப்படும் இந்த டைமண்ட் நடப்பு கணக்கில் SBI கொண்டுவந்துள்ளது. அதாவது டைமண்ட் நடப்பு கணக்கு என்பது சிறந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்கள் பலரும் மொத்தமாக பண பரிவர்த்தனைகளை இத்தகைய திட்டத்தின் மூலம் கையாள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும்.

ஆனால் இதற்கும் மாத சராசரி இருப்பு தொகையானது ரூபாய் 5 லட்சம் இருக்க வேண்டும். இதையடுத்து மாதம் ஒரு கோடி வரை ரொக்கமாக டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக SBI வங்கியால் அனுமதிக்கப் படுகின்றது. மேலும் அது மட்டுமல்லாமல் வங்கி கணக்கு ஆரம்பிக்கபட்ட கிளையிலிருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் எனவும்  தெரிவித்துள்ளது. இதுபோக வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக RTGS மற்றும் NEFT மூலம் பணத்தை பெறும் வசதி மற்றும் பணத்தை செலுத்தும் வசதி ஆனது செய்யப்பட்டுள்ளது.

மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக மாதத்திற்கு 700 மல்டி சிட்டி லீவ்களை பெறலாம். இவ்வாறு SBI  டைமண்ட் நடப்பு கணக்கு தொடங்க விரும்புபவர்கள் https://sbi.co.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து ரூ.2,00,000  வரை ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் பிரீமியம் வணிக டெபிட் கார்டும் மற்றும் ரூ. 22,000க்கும் மேற்பட்ட SBI வங்கி கிளைகளில் இருந்து ஈஸியாக பணம் எடுக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |