கேரள மாநில சட்டப் பேரவையில் நேற்று 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதிமந்திரி கே.என். பாலகோபால் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களான, “விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூபாய் 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் வெளிவட்ட சாலைக்கு ரூபாய்.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் பணிக்கு ரூபாய் 127 கோடியானது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு ரூபாய் 26 கோடி ஒதுக்கீடு. இதையடுத்து கண்ணூரில் புதிய தகவல் தொழில்நுட்பம் பூங்காவும், கொல்லத்தில் 5 லட்சம் சதுரடியில் தகவல் தொழில்நுட்பம் பூங்காவும் அமைக்கப்படும். அதன்பின் தகவல் தொழில்நுட்பம் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூபாய் 100 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தகவல் தொழில்நுட்பம் பூங்காக்களை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 5G சேவையை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ரப்பர் மானியத்துக்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதனை தொடந்து வேளாண் துறைக்கு ரூ.851 கோடி, அணைகளில் தூர்வாருவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பின் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 12 கோடி மனித நாட்கள் வேலை கொண்டு வரப்படும். மனித விலங்கு மோதல்களை குறைப்பதற்கு ரூபாய் 25 கோடி, சுற்றுச்சூழல் சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்ட்டுள்ளது.