Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ட்ராவான தேர்தல் முடிவு” திடீர் கலவரம்….. டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு….. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் வாக்குசாவடி ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க முயன்ற டிஎஸ்பிஐ  மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் 14 தொகுதியில் அதிமுக-5 திமுக-6 அமமுக-1 சுயேச்சை-2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதையடுத்து தலைவர் துணைத் தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும் திமுக சார்பில் காளீஸ்வரி என்பவரும் போட்டியிட்டனர்.

போட்டி முடிவில் இருவரும் சம வாக்குகள் பெற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச்சாவடிக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியிலும் இந்த தேர்தல் முடிவுகள் பரவ வாக்குவாதம் முற்றி பின் கலவரம் ஏற்பட்டது..  அப்போது திடீரென ஒரு கும்பல் வாக்குச்சாவடி மையத்திற்குள் அரிவாளுடன் நுழைந்தது. மற்றொரு கும்பல் வெளியில் இருந்த காவல் அதிகாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது.

உள்ளே நுழைந்த கும்பலை தடுக்க முயன்ற அருப்புக்கோட்டை டிஎஸ்பியை அரிவாளால் வெட்டி விட்டு அந்த மர்ம கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து சம்பவம் குறித்து டிஎஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட காவல் சிறப்பு படையினருடன் அங்கு விரைந்த எஸ்பி கலவரத்தில் ஈடுபட்ட சில நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |