Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார் டிரைவரை கடத்திய கும்பல்… “ரூ 1,45,000 மீட்பு”.… போலீசார் அதிரடி…!!

சேலம் மாவட்டம் அன்னதானப் பட்டியில் கார் டிரைவரை கடத்தி சென்ற கும்பலிடமிருந்து ரூ 1.45 லட்சம் பணமும், மோட்டார் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பொடாரங்காடு பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் என்பவருடைய மகன் கார் டிரைவரான பிரகாஷ்(25) என்பவரை 4 பேர்  சேர்ந்து கடத்தி சென்று 3 லட்சம் ரூபாய் பணத்தை அபேஸ் செய்துள்ளார்கள்.இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில்  பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது ஏற்கனவே வழிப்பறி வழக்கில் சிறையில்  இருக்கும்  கபாலி(30), மணிகண்டன்(29), வீரமணி(28), சரத்குமார்(30) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.  உடனே அந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திய  போது  பிரகாஷை கடத்தி சென்றவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆனந்தகுமார் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |