Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் ஏன் சத்துணவு ஊழியரை கொலை செய்தேன் தெரியுமா?…. கொலையாளி பரபரப்பு வாக்கு மூலம்..!!

தலைவாசல் அருகில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரை கொன்ற வழக்கில்  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காவல்துறையில் சரண் அடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள தென்குமரை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான வெங்கடாசலம் (57). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி இரவு வெங்கடாசலம் தலைமையில் 10 பேர்கள் சேர்ந்து ராமசாமி வீட்டிற்கு சென்றனர். அப்போது ராமசாமி வீட்டில் இல்லை  அவருடைய அக்கா ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரான பூவாயி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். உடனே அந்த கும்பல் பூவாயியை  சரமாரியாக தாக்கியுள்ளது.

இதனால்  படுகாயமடைந்த பூவாயியை  அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூவாயி பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து ராமசாமி காவல்துறையில் புகார் செய்துள்ளார். இப்புகாரின் பேரில் வெங்கடாசலம் உட்பட 10 பேர் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் 9 பேர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில்  முக்கிய கொலை குற்றவாளியான  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் தலைவாசல் காவல் நிலையத்தில் வெங்கடாசலம் சரண்  அடைந்துள்ளார். இதையடுத்து   நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது,  விவசாயி ராமசாமிக்கும், எனக்கும் நிலம் விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அவருடைய நிலத்தை வாங்குவதற்காக முன் பணம் கொடுத்தும் அவர் நிலத்தை விற்பனை செய்யாமலும், பதிவு செய்ய வராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும்  முயன்றுள்ளார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இதனால் ராமசாமியின் நிலத்தில் பயிரிட்ட மக்காச்சோளத்தை அழித்தோம். மேலும் அன்றிரவு ராமசாமி தாக்க போனபோது ராமசாமி வீட்டில் இல்லாமல் அவருடைய அக்காள் பூவாயி தான் வீட்டில் இருந்தார். இதனால் அவரை நாங்கள்  தாக்கியதால் படுகாயமடைந்த பூவாயி உயிர்க்கு போரடினார். உடனே நாங்கள் தப்பித்து சென்றுவிட்டோம்.  பூவாயி இறந்த தகவலை தெரிந்து கொண்டு நான் பத்து நாட்கள் தலைமறைவாக இருந்தேன். என்னை  போலீசார் தீவிரமாக தேடி வந்ததால் சரண் அடைந்தேன் என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |