Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நிலை சரியில்லாததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முகந்தனூர்  கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனையால்  அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடாசலம் வீட்டில் விஷம்  குடித்து மயங்கியுள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வெங்கடாசலத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |