சீனாவின் பிரதமரான லி கெகியாங் இந்த வருடத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
சீனாவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து லி கெகியாங் பிரதமராக இருக்கிறார். இவரின் இரண்டாவது 5 ஆண்டு பதவிக்காலமானது இந்த வருடத்தில் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் லி கெகியாங் இந்த வருடத்துடன் தன் பதவிக் காலம் முடிந்து தான் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அதிபர் ஜின்பிங்கிற்கு பின் அதிகாரமுடைய தலைவராக அறியப்பட்ட லி கெகியாங், நாடாளுமன்றத்தில் நேற்று சீன நாட்டின் அதிபராக எனக்கு இது இறுதி வருடம் என்று தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் நடைமுறைப்படி ஆளும் கட்சி, அரசுக்கு தலைமை தாங்கக்கூடிய தலைவர்கள் இரண்டாவது 5 ஆண்டு பதவி காலத்திற்குப்பின் ஓய்வு பெறுவார்கள். அந்த வகையில் பிரதமர் லி கெகியாங் ஓய்வு பெறுகிறார். எனினும், அதிபர் ஜின்பிங் தன் 10 வருடகால பதவிகாலம் நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து அதிபராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.