சின்ன வெங்காயம்.
சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தனித்து உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். உடல் வலி மற்றும் புற்று நோயை நீக்கும் பண்புகள் கொண்டது. இதில் விட்டமின் சி சத்து தாராளமாக உள்ளது .பச்சை வெங்காயத்தில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது .விட்டமின் சி சத்தினை வெங்கய்யத்தில் இருந்து முழுமையாக பெற வேண்டுமானால் அதனை பச்சையாக சாப்பிடுவதே நல்லது.
வெங்கய்யத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும் இரத்தம் சுத்தமடையும் சீரண உறுப்புகளின் செயல்திறன் பெருகும் எலும்புகளுக்கு நல்ல வலிமையை தரும் நரம்புகளின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்உடல் சூடு மிகுந்திருந்தால் இயல்பான நிலைக்குக் கொண்டுவரும்.
.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள் தாது உப்புக்கள் வைட்டமின்கள் உள்ள, எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத் தருகிறது நான்கு ஐந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.
சம அளவு வெங்காயச் சாற்றுடன் வளர்பட்டை செடி இலை சாற்றை கலந்து காதில்விட காது வலி குறையும். வெங்கய்ய சாறு கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.