Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கல்மரப் படிமம்… மண் போட்டு மூடி ரோடு போட்டுட்டாங்க…. அருங்காட்சியத்தில் வைக்கனும்… பொதுமக்கள் கோரிக்கை…!!

12 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரப் படிமத்தை அருங்காட்சியத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பாக டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்மர படிமம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சுற்றுப்புற கிராமங்களில் டைனோசர் முட்டை படிமங்கள், நத்தை படிமங்கள், கிளிஞ்சல் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குன்னம் கிராமம் அருகில் ஆனைவாரி ஓடையில் சுமார் 8 அடி நீளமுள்ள கல்மர படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்மரப் படிமம் 12 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இந்தப் படிமத்தை குன்னம் தாலுகா அருகே புதிய  அருங்காட்சியம் அமைத்து  பத்திர படுத்த வேண்டும். அல்லது சாத்தனூரில் உள்ள கல் மர பூங்கா வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து  நேரில் பார்வையிட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை.

அதன்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வேப்பூர் ஒன்றிய பொது நிதியில் ரூபாய் 2 லட்சம் செலவில் மண் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அதில் கல் மரத்தின் மீது  மண் கொட்டி மூடி சாலை அமைத்தனர். இத்தகவல் அறிந்த பொதுமக்கள் மண் கொட்டி மூடப்பட்ட கல் மரத்தை மீட்டு குன்னத்தில் அருங்காட்சியம் அமைத்து  பத்திர படுத்த வேண்டும் என்று குன்னம் தாசில்தார் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுதொடர்பாக குன்னம் தாசில்தார் நேற்று முன்தினம் கல்மரம் மூடப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தொல்லியல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

Categories

Tech |