Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாமி தரிசனம்…… கோவில் வளாகத்தில் திருடர்கள் கைவரிசை….. திருவண்ணாமலையில் வாழ்க்கையை தொலைத்த ஆந்திர பெண்….!!

திருவண்ணாமலையில் ஆந்திர பெண் ஒருவரின் மடிக்கணினியை திருடர்கள் திருடி சென்றதால் அவர் தனது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம்  அதிக அளவில் காணப்படும். ஆகையால் அங்கு நாள்தோறும் வரும் கார் மற்றும் வாகனங்களை நிறுத்த அரசு சார்பிலும் கோவில் நிர்வாகம் சார்பிலும் வசதி ஏற்படுத்தபட்டதுடன் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க ஆந்திராவிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர் தங்களது காரை அம்மணி அம்மன் கோபுரம் அருகே  நிறுத்தி பூட்டிவிட்டு தரிசனத்திற்காக சென்றுள்ளனர். பின் திரும்பி வந்து பார்க்கும்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்து மடிக்கணினி திருடு போய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரிடம் விசாரிக்கையில் தான் ஆஸ்திரேலியாவில் மருத்துவப்படிப்பு படித்ததாகவும், வேலூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியில் சேர்வதற்கான முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதற்கான ஆய்வறிக்கையை மடிக்கணினியில் வைத்திருந்ததாகவும்  கூறி கதறி அழ, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அவர்களைப் பிடித்து விடலாம் என்று கூறி காவல்துறையினர் அவரை ஆறுதல் படுத்தினர். தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |