Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மினி லாரி மோதி… 6 ஆடுகள் பரிதாப பலி… தப்பிய டிரைவர்… தேடி வரும் போலீசார்…!!

மதுக்கூர் அருகில் மினி லாரி மோதி 6 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சாளுவன் விடுதியில் வசித்து வரும் மாணிக்கம் என்பவர் ஆடுகளை  வளர்க்கும்  தொழில் செய்து வருகின்றார். மாணிக்கம் தற்சமயம் பட்டுக்கோட்டை பகுதியில் ஆட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டுக்கோட்டை அருகிலுள்ள நெடுவயல் கிராமத்திலிருந்து மதுக்கூர் அருகிலுள்ள பெரியகோட்டை கிராமத்திற்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஆட்களுடன் ஆடுகளை கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அதிகாலை 4 மணி அளவில் மதுக்கூர் பெரியகோட்டை ரோட்டில் சிராங்குடி அருகில் வரும் போது எதிரே வந்த மினி லாரி திடிரென ஆடுகள் மீது மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே 6 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 4 ஆடுகள் படுகாயமடைந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே  நிறுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து மாணிக்கம் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |