மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. தற்போது முதன் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே தற்போது வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது வருங்காலத் தலைமுறைக்கு அவசியமானது என்று முதல்வர் எடுத்துரைத்தார். அதுமட்டுமல்லாமல் நாட்டிற்கு நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.