ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் புதிய லேப்டாப் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஜியோ லேப்டாப்பில் ஜியோபுக் மாடல் எண்ட்ரி-லெவல் அம்சங்கள் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன் இந்த லேப்டாப்பின் அம்சங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் வெளியாகியிருந்தது. அதன்படி, புதிதாக ஜியோபுக் என்.பி.112எம்.எம். என்ற குறியீட்டு பெயருடன் உருவாகி வருகிறது. இதில் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் இருக்கிறது.
மேலும், இந்த லேப்டாப்பில் Full HD Resolution Display, ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ்., டூயல் பேண்ட் வைபை, 4G LDE ஆகிய அம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. ஜியோபுக் அம்சங்கள் குறித்து தற்போதுவரை அந்நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை.