Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் பயன்பெறலாம்” 489 கோடி ரூபாய் கடன்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல்      பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்பதற்காக அமைக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி, இந்த சுழல் நிதி பெண்கள் பொருளாதாரத்தின் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள  மாற்றுத்திறனாளிகள்,நலிவுற்றோர் ஆகியோரை நேரில் கண்டு அவர்களுக்கு நேரடியாக  வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பெண்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு உரிய விலை, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிக்காண   ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  11 ஆயிரத்து 18 மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 716 பெண்கள் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு 489 ஒரு கோடி ரூபாய் வங்கி  கடன் வழங்கப்பட்டுள்ளது என அவர் அந்த  அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |