காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் வழக்கமான பணி சூழலில் நம்மில் பலரை சோர்வடைய வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆலயத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கி கொண்டு வேலை பார்க்கும் சூழல் பலருக்கும் இருக்கிறது. இந்த வேலை என்பது நாம் வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த அளவு முக்கியமானது என்பது நமக்கு தெரியும். அதனால் தான் எல்லாவற்றையும் அனுசரித்துக் கொண்டு பேசாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஹரியானாவைச் சேர்ந்த இரண்டு இன்ஜினியர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்து அவர்கள் பெற்ற ஊதியம் போதுமானதாக இல்லை. அதனால் வேலையே தூக்கி எறிந்துவிட்டு உணவுத் தொழிலில் இறங்க முயற்சி செய்தனர். இந்த தொழில் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் மனம் நிறையும் அளவுக்கு வருமானம் கிடைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுபற்றி ரோஹித் மற்றும் சச்சின் கூறுகையில் “எங்கள் பிரியாணி கடையில் அதிகமாக எண்ணெய் சேர்ப்பது இல்லை அரை பிளேட் பிரியாணி 50 ரூபாய் மற்றும் முழு பிளேட் பிரியாணி 70 ரூபாய் ஆகும்., கிரேவி வெஜ் பிரியாணி ,ஆச்சாரி வெஜ் பிரியாணி என இரண்டு வகை வெரைட்டிகளை வழங்குகிறோம். இது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு எங்கள் பிரியாணி உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.