மனைவியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராதிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த மோகன்ராஜ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் அடிக்கடி மோகன்ராஜுக்கும் ராதிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராதிகா புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன்ராஜ் ராதிகாவை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த ராதிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகன் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.