5 மாநில தேர்தல்களில் 4-ல் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த நிலையில் இரண்டுநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கக்ள் சொந்த மாநிலமான குஜராத் சென்றார். அப்போது மோடிக்கு விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
அதன்பின் மோடி பா.ஜ.க அலுவலகம் சென்று அங்கு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதனைதொடர்ந்து மோடி காந்தி நகரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்தார். இந்தநிலையில் மோடி, தாயார் காலில் விழுந்து ஆசி பெற்ற பின்னர் அவருடன் சேர்ந்து உணவு அருந்தினார்.