வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள டி.ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.