அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய எடுத்த முயற்சியின் காரணமாக உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இதையடுத்து நேட்டோவில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் அறிவித்தபோதும் ரஷ்யா போரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் போருக்கு இடையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்து, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது.
இதனிடையில் உக்ரைனுக்கு அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்கி வரும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விரைவாக நுழையும் கோரிக்கையை நிராகரித்து விட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது பல வருடங்கள் எடுக்கும் ஒரு நீண்ட செயல்முறை என்றும் ஆர்வமுள்ள நாடு பொருளாதார ஸ்திரத்தன்மை முதல் தாராளவாத மனித உரிமைகளை மதிப்பது மற்றும் ஊழலை வேரறுப்பது வரை கடுமையான அளவுகோல்களை சந்திக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடுகள் கூறுகின்றன.