பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை கிராமத்தில் சவுமியா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது . அதில் பேசிய மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் ஏ.டி.எ.ம். கார்டு மூடக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே நான் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள லிங்கில் ஏ.டி.எம்.விவரங்களை பதிவு செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய சவுமியா தன்னுடைய ஏ.டி.எம். கார்டு விவரங்களை அந்த லிங்கில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சவுமியாவின் செல்போனிற்கு தனது வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த உடனடியாக சவுமியா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.