சமந்தாவை பாதுகாப்பாக கிரிக்கெட் வீரர் வருண் தவான் அனுப்பிவைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சென்ற அக்டோபர் மாதம் தன் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். அப்போதிலிருந்து சமந்தா எது செய்தாலும் அனைவரும் கவனித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து சமந்தா தோழிகளுடன் உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் சமந்தா மும்பை அந்தேரியில் உள்ள ஒரு பில்டிங்கிருந்து இயக்குனர் ராஜ் நிடிமோர் மற்றும் கிரிக்கெட் வீரர் வருண் தவான் உள்ளிட்டோருடன் வருகின்றார். சமந்தாவை பார்த்த ரசிகர்கள் முண்டியடித்து நெருங்குகின்றனர். கிரிக்கெட் வீரர் வருண் தவான் ஏன் சமந்தாவை முறைக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே சமந்தாவை பாதுகாப்புடன் அவரின் கார் வரைக்கும் அழைத்துச் சென்று ஏற்றிவிட்டார். இவ்வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.