Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா…. லட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்….!!

ரஷ்யாவின் அதிபயங்கர தாக்குதலால் 25 லட்சம் பேர் தங்களது வாழ்விடங்களை விட்டு உக்ரேனிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 18 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் இருதரப்பு மோதலில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா அகதிகள் அமைப்பு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த அர்த்தமற்ற போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை உக்ரேனை விட்டு 25 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |