Categories
மாநில செய்திகள்

கடும் அதிருப்தியில் தமிழக பள்ளி ஆசிரியர்கள்…. கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

மாணவர்களின் உடல் நலம் சார்ந்த கேள்விகளை கேட்டு பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று ஆசிரியர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மாணவர்களின் உடல் நலம் மற்றும் இடைநிலை ஏற்படுவதற்கான காரணங்களை அறியும் பொருட்டு பல்வேறு தகவல்களை திரட்ட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் மாணவிகளுக்கும் மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா? மாதவிடாய் ஓழுங்காக வருக்கிறதா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறதா? மாணவர்கள் பான் ஜர்தா போடும் பழக்கம் உள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேர்தல்பணிகள்  மற்றும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் மாணவர்களின் விவரங்களை சேகரிப்பது, வருகை பதிவேற்றம் செய்வது என்பது போன்ற விவரங்களை சேகரித்து சமர்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து கொண்டு வரும் நிலையில் மாணவர்களின் உடல் நலன் சார்ந்த கேள்விகளை கேட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Categories

Tech |