தமிழகத்தில் சத்துணவு திட்டம் கடந்த 1982ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்பவரால் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை அரசு பள்ளிகளில் அவர் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு தற்போது வரை இந்த திட்டம் செயல் முறையில் இருந்து வருகின்றது. அதனால் பள்ளி மாணவர்கள் பலன் அடைகின்றனர். பள்ளிகளில் சத்துணவு திட்டம் உள்ள காரணத்தால் எளிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் ஆர்வமுடன் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பாண்டி அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், 1982ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு சத்துணவு ஊழியர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இன்று வரை பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சத்துணவு அமைப்பாளர் சம்பளம் ஆரம்பத்தில் 150 ரூபாயாக இருந்தது. தற்போது 7,500 ரூபாயாக மாறிவிட்டது. இதற்கு அடுத்ததாக சமையலறை 60 ரூபாய் என்பது 7,300 ரூபாயாகவும், உதவியாளருக்கு 5,900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணி ஓய்வுபெறும் அமைப்பாளர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. பல போராட்டங்களுக்குப் பின்னர் தான் இவையெல்லாம் கிடைத்துள்ளது.
மேலும் சத்துணவு ஊழியர்களுக்கு கட்டாயமாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தேர்தல் காலத்தில் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 35 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் சத்துணவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.