ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து தற்போது நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத் தேர்விற்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து பொது தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.
இது ஒரு பக்கமிருக்க 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி இணையதளம் வாயிலாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் கற்பிக்கின்ற முதல் நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், போன்ற ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது வருகிற திங்கட்கிழமை மார்ச் 14-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும் இணையதளத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற தலைப்பின் கீழ் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனை அடுத்து இந்தப் பயிற்சிக்கான காணொளி செயல்பாடுகள் முதலியன. உள்ளடக்கப்பட்ட 12 கட்டடங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.