தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு காண தேதிகளை வெளியிட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் இன்னும் அதற்கான தேதிகளை வெளியிடவில்லை என்றும் இது தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துறை மூலமாக மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மே 13ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளிகள் அடுத்த ஜூன் 13ஆம் தேதி திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்