Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடகடவுளே….! 1 1/2 கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா…. கடும் விலை குறைவால் விவசாயிகள் வேதனை….!!

தக்காளி வரத்து அதிகரிப்பால் 1 1/2 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்த தக்காளிகளை நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி போன்ற வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் தக்காளி 1 கிலோ 30 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளியின் வரத்து அதிகாரிப்பால் விலை மிகவும் குறைந்துள்ளது. அதன் அடிப்படையில் 1 1/2 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி விவசாயிகளின் மத்தியில் பெரும் கவலையடைய செய்துள்ளது.

Categories

Tech |