Categories
கரூர் மாவட்ட செய்திகள்

1,159 பேர் மீது வழக்குப் பதிவு…. அதிரடி சோதனை…. இன்ஸ்பெக்டரின் தகவல்….!!

வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,159 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுயுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தினந்தோறும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது வேகமாக வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது போன்ற பல வாகன விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வசூல் செய்து வந்தனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது விதிமீறல் செயல்களில் ஈடுபட்ட 1,159 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு கூறியதாவது, லாலாபேட்டை உள்பட 6 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, தலைக்கவசம் அணியாது, லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்தது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது மற்றும் சீட் பெல்ட் அணியாதது போன்ற பல வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 1,159 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1,17,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 நபர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |