மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்குடி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் அமைந்துள்ள தனது விவசாய நிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாலையில் ஐயப்பன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது சாலையில் நிறுத்திய மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.